FCI வீணாக்கிய 10 லட்சம் டன் உணவு தானியம்!
கடந்த 10 ஆண்டுகளில் நமது FCI (Food Corporation of India) கோடவுன்களில், (ஒரு கோடி ஏழை மக்களின் பசிப்பிணியை ஓராண்டு காலம் போக்க வல்ல) பல நூறு கோடிகள் மதிப்புள்ள 10 லட்சம் டன் உணவு தானியங்கள் உபயோகத்திற்கு லாயக்கிலாமல் போயிருக்கின்றன என்ற திடுக்கிடும் செய்தி, இந்தியக்குடிமகன் ஒருவர் 'தகவல் அறியும் உரிமை'யின் (RTI) பேரில் செய்த விண்ணப்பம் மூலம் தெரிய வந்துள்ளது !!!
இத்தனைக்கும், FCI நிறுவனம் தானிய சேமிப்பு பராமரிப்புக்காக ரூ.242 கோடி செலவு செய்த பின்னரும் இது நிகழ்ந்துள்ளது. அடுத்து, கெட்டுப் போன தானியங்களை கோடவுன்களிலிருந்து வெளியேற்ற இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை!
பல நூறு கோடி பெறுமானமுள்ள தானியங்கள் வீணாக்கப்பட்டிருப்பதை (தானியங்கள் வாங்குவதற்கும், சேமிப்பதற்கும், மாநிலங்களுக்கு பிரித்து வழங்குவதற்கும் பொறுப்பேற்று இருக்கும்) FCI நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. UNO (United Nations Organization) அறிக்கை ஒன்று, இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 63 சதவிகிதத்தினர் இரவு உணவு கிடைக்காமல் தூங்கச் செல்கின்றனர் என்ற அவலத்தை பறைசாற்றுவதை, இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது :(
இது ஒரு தேசிய அவமானமில்லையா ?????
இது போல பலப்பல பிரச்சினைகள் இருக்க, நமது பிரதமர் (அமெரிக்காவின் அடி வருடி) அணு ஆயுத ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற துடியாய் துடிப்பது வேதனை !
எ.அ.பாலா
நன்றி: Financial Express
7 மறுமொழிகள்:
test !
அடப்பாவிகளா...
யாராவது பொருளியலாளர் இந்த கேள்விக்கு பதில் சொல்வாங்களா..
எதுக்கு தானியத்தை சேமிக்கணும். பேசாம எல்லாத்தையும் வர வர மார்க்கெட்ல விட்டா, தானியங்களோட விலைவாசி குறைந்து ஏழைகளுக்கு பயன் தராதா? போக்குவரத்து வாகன தட்டுப்பாடுதான் இந்த மாதிரி சேமிக்கரதுக்கு காரணமா?
இந்த வீணாய்ப்போன தானியங்கள் வேறு எதற்குமே உதவாதா (உதா: உரமாக).
இதை இன்னும் எந்த தொல்லைக்காட்சி சேனல்களிலும் காட்டவில்லை போல இருக்கிறதே.. ஆமாமா அவங்களுக்கு ஆசியா கோப்பையும், ஆருஷி கொலையும்தானே முக்கியம்.
//இது போல பலப்பல பிரச்சினைகள் இருக்க, நமது பிரதமர் (அமெரிக்காவின் அடி வருடி) அணு ஆயுத ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்ற துடியாய் துடிப்பது வேதனை !//
இதென்ன கொடுமை பாலா?
அணுசக்தி ஒப்பந்தத்தில் நீங்கள் காணும் குறை என்ன என்று சொல்லுங்கள்.விவாதிக்கலாம்.அதை விடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் அணு சக்தி ஒப்பந்தத்தையும், உணவுப்பொருள் வீணாவதையும் சேர்த்து முடிச்சு போட்டால் என்னவென்று பதில் கூற?
உங்கள் பழைய பதிவையும் பார்த்தேன்..4% மின்சாரம் தான் அணுசக்தியால் கிடைக்கும் என்கிறீர்கள்...4% மின்சாரம் என்றால் வேண்டாம் என்கிறதா?நமது நாட்டில் ஏற்கனவே மின்சார பற்றாகுறை. ஒவ்வொரு சதவிகித மின்சாரமும் முக்கியம்.இப்படி வரும் மின்சாரத்தை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அப்புறம் மின்சாரம் இல்லயென்றவுடன் குய்யோ,முய்யோ என்றால் புண்ணியமில்லை.
இதை வைத்து அரசியல் செய்வது இடதுசாரிகள் தான்.அவர்கள் என்ன உணவுப்பொருள் வீணாகிறதென்றா ஆதரவை வாபஸ் பெறுகின்றனர்?அணுஆயுத உடன்படிக்கையை சாக்காக வைத்துத்தானே ஆதரவை வாபஸ் பெறுகின்றனர்?பிரதமரின் நேரம் வீணாககூடாதென்றால் அவர்களை இதை பெரிய விஷயமாக ஆக்கவேண்டாம் என்று சொல்லுங்கள்.ஒன்றுமில்லாததை வைத்து காம்யூனிஸ்டுகள் சீரழிவு அரசியல் நடத்தினால் அப்புறம் பதிலுக்கு ஆளும்கட்சியும் எதிர்ப்பரசியல் நடத்தித்தானே ஆகவேண்டும்?
மேட்டர் வீணாவதில் இல்லங்க. தானியங்கள் வீணாகிவிட்டதாக கணக்குக் காட்டிவிட்டு கள்ளச் சந்தையில் விற்று பணம் பண்ணுகிறார்கள் இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகள்.
புபட்டியன்,
கருத்துக்கு நன்றி. ஓரளவு சேமித்துத் தான் ஆக வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளலாம். ஆனால், இவ்வளவு wastage ஆனது, சரியான பராமரிப்பு நடவடிக்கை, சரியான் நேரத்தில் எடுக்கத் தவறியதால் தான் :( நமது மீடியாக்களுக்கு இந்த மாதிரி செய்திகளில் லாபமில்லை !
செல்வன்,
வாங்க !
//அணுசக்தி ஒப்பந்தத்தில் நீங்கள் காணும் குறை என்ன என்று சொல்லுங்கள்.விவாதிக்கலாம்.அதை விடுத்து சம்பந்தா சம்பந்தமில்லாமல் அணு சக்தி ஒப்பந்தத்தையும், உணவுப்பொருள் வீணாவதையும் சேர்த்து முடிச்சு போட்டால் என்னவென்று பதில் கூற?
//
நான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து 2 பதிவுகள் எழுதியுள்ளேன் தானே! நான் கூறவந்தது, இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, ஒரு பிரச்சினையை கௌரவ / தனிப்பட்ட பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, பிரதமர் செய்யும் அலம்பல் தாங்க முடியவில்லை !
//உங்கள் பழைய பதிவையும் பார்த்தேன்..4% மின்சாரம் தான் அணுசக்தியால் கிடைக்கும் என்கிறீர்கள்...4% மின்சாரம் என்றால் வேண்டாம் என்கிறதா?
//
மேலும், 4% தான் என்பதை விட, அதற்கான செலவு அதிகம் என்பது தான், அதாவது commercial viability!
//ஒன்றுமில்லாததை வைத்து காம்யூனிஸ்டுகள் சீரழிவு அரசியல் நடத்தினால் அப்புறம் பதிலுக்கு ஆளும்கட்சியும் எதிர்ப்பரசியல் நடத்தித்தானே ஆகவேண்டும்?
//
இடதுசாரிகளின் அரசியல் தெரிந்தது தான்! ஆனால், இந்த விஷயத்தில் அவர்கள் நிலைப்பாடு தெளிவாகவே இருக்கிறது. மேலும்,இடதுசாரிகளின் ஆதரவோடு குப்பை கொட்டும் காங்கிரஸ்அரசு அவர்களிடமே IAEA உடன்பாட்டுப் பத்திரத்தை காட்டாமல் சாக்குபோக்கு சொல்லி ஏமாற்றுவது அவர்களின் நேர்மையற்ற தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு !
பாராளுமன்றத்தில், 123 மற்றும் IAEA ஒப்பந்தங்கள் பற்றி விரிவாக விவாதம் நடத்தி விட்டு, அவை நிறைவேற்றப்படுவது தான் சரியான அணுகுமுறையாக இருக்கும். புஷ் பதவி விலகுவதற்கு முன் இந்த ஒப்பந்தத்தை எப்படியாவது நிறைவேற்றி விட வேண்டும் என்று அரசு கிடந்து துடிப்பது கேவலமாக இருக்கிறது :(
அனானி,
//தானியங்கள் வீணாகிவிட்டதாக கணக்குக் காட்டிவிட்டு கள்ளச் சந்தையில் விற்று பணம் பண்ணுகிறார்கள் இந்தக் கேடுகெட்ட அரசியல்வாதிகள்.
//
அப்படியும் இருக்கலாம் தான் :(
எ.அ.பாலா
Post a Comment